வாரத்தின் துவக்க நாளான திங்கட்கிழமை காலையில் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச் சந்தை பிற்பகல் 2 மணியளவில் குறையத் தொடங்கியது.
என்றாலும் மும்பை பங்குச் சந்தையானது, வெள்ளிக்கிழமை சந்தை நிறைவடைந்த போது இருந்த குறியீட்டைக் காட்டிலும் 76 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 10,051.43 ஆக இருந்தது.
தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.
இதேபோல நிஃப்டி குறியீடு பிற்பகலில் சரியத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை சந்தை நிறைவைக் காட்டிலும், இன்று பிற்பகல் 2 மணியளவில் 3 புள்ளிகள் குறைந்து 3,071 ஆக இருந்தது.