இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 18 பைசா உய‌‌‌ர்வு!

திங்கள், 20 அக்டோபர் 2008 (13:14 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 18 பைசா உய‌‌ர்‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தை கட‌ந்த ‌வெ‌ள்‌ளிய‌ன்று நிறைவடையும் போது ரூ.48.88 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியது‌ம் ரூ.48.72 ஆக உய‌‌ர்‌ந்தது.

நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.48.70ல் இரு‌ந்து ரூ.‌48.86 ஆக காண‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்