டாலர் மதிப்பு 43 பைசா உயர்வு!

வியாழன், 16 அக்டோபர் 2008 (11:35 IST)
மும்பை:வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு ரூ.49 ஐ தாண்டியது.

அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 49.04 பைசா என்ற அளவில் இருந்தது.

இது நேற்றை இறுதி நிலவரத்தைவிட 52 பைசா குறைவு.

நேற்றை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 48.52/48.53.

பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 670 புள்ளிகள் குறைந்தது.

இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலரை வாங்குகின்றனர். அத்துடன் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வதால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.



வெப்துனியாவைப் படிக்கவும்