பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:24 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன.

பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஆரம்பிக்கும் போது நிஃப்டி 216, சென்செக்ஸ் 799 புள்ளிகள் சரிந்தன.

சென்செக்ஸ் 11 ஆயிரத்திற்கும் குறைந்தது.

புதன்கிழமையும் சென்செக்ஸ் 11 ஆயிரத்திற்கும் கீழ் இறங்கியது. பிறகு உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்க ஆரம்பித்தனர். இதனால் மீண்டும் அதிகரித்தது. ஆனால் இன்று உள்நாட்டு நிறுவனங்கள் முழு மூச்சுடன் களத்தசில் இறங்குமா என்பது கேள்விக்குறிதான்.

பங்குச் சந்தைகளின் கடும் வீழ்ச்சியை தொடர்ந்து பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை அரை விழுக்காடு குறைத்துள்ளது. இதனால் நிதிச் சந்தையில் பணப்புழக்கம் ரூ.20 ஆயிரம் கோடி அதிகரிக்கும். இந்த புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

செபி பி-நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்களின் விதிமுறையை தளர்த்தியது. ஆனால் அந்நிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், பி-நோட் வாயிலாக முதலீடு உடனே வருவதற்கான சாத்தியக் கூறு குறைவாகவே உள்ளது.

அத்துடன் இன்று தொழில் துறை உற்பத்தி பற்றிய புள்ளி விபரம் வெளியிடப்படும். அதே போல் பணவீக்கம் பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படும். பணப்புழகத்தில் பெரிய அளவு மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 170 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3343.65 ஆக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 601.84 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10,729.52 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 230.58, சுமால் கேப் 225.98, பி.எஸ்.இ. 500- 221.48 புள்ளிகள் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.
டோவ்ஜோன்ஸ் 678.91, நாஸ்டாக் 95.21, எஸ் அண்ட் பி 500- 75.02 புள்ளிகள் குறைந்தது.

இதே போல் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் சரிந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-52.89 புள்ளிகள் குறைந்தது.

இன்று காலை ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன.

ஹாங்காங்கினஹாங்செங் 1,121,31, ஜப்பானின் நிக்கி 862.07, சீனாவின் சாங்காய் காம்போசிட் 67.81, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 138.48, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 78.69, புள்ளிகள் சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.49 மணியளவில் 235 பங்குகளின் விலை அதிகரித்தும், 1761 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 18 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் புதன் கிழமை 1.055.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 1,083.56 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் இருந்த நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்று எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்