அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 39 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை கடந்த வெள்ளியன்று நிறைவடையும் போது ரூ.46.49 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் ரூ.46.88/90 ஆக சரிந்தது.
நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.46.75ல் இருந்து ரூ.46.95 ஆக காணப்பட்டது.
இன்றைய சரிவினால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 வார காலத்தில் மிகக் குறைந்த அளவாக வீழ்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகம் உள்ளதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.