மும்பை: தங்கம், வெள்ளி விலை சரிவு!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (13:55 IST)
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.125ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.90ம் குறைந்துள்ளது.
சர்வதேச பங்குச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 875.00/875.50 ஆக இருந்தது 879.30/882.30 டாலர்களாக சரிந்துள்ளது.
இதேபோல் பார் வெள்ளியின் விலை குறைந்து வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 13.28/13.29 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 13.40/13.44 டாலர்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,045 (நேற்று ரூ.13,180)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,985 (ரூ.13,125)
வெள்ளி (10 கிராம்): ரூ.20,955 (ரூ.20,935)