சென்செக்ஸ் 122 – நிஃப்டி 35 புள்ளி உயர்வு!

புதன், 24 செப்டம்பர் 2008 (17:14 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது எல்லா பிரிவு பங்கு விலைகளும் அதிகரித்தன

ஆனால் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 122.21 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,692.52 ஆக உயர்ந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 13.47, சுமால் கேப் 08.54, பி.எஸ்.இ 500- 35.55 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 35.35 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4161.25 ஆக உயர்ந்தது.

தொழில் நுட்பம் பங்குகளின் விலை 1.10% குறைந்தது.

அதே நேரத்தில் உலோக உற்பத்தி பிரிவு 2.19%, ரியல் எஸ்டேட் 0.34%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.59%, மின் உற்பத்தி பிரிவு 1.10%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.22% வங்கி 1.21% அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,352 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,239 பங்குகளின் விலை குறைந்தது. 86 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ் ஐ.டி தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்