அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 2 பைசா சரிந்துள்ளது.
அன்னியச் செலாவணி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.45.72 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் ரூ.45.74 ஆக சற்றே சரிந்தது.
வங்கிகள் 2 நாள் வேலை நிறுத்த அறிவிப்பால் அன்னிய செலாவணி சந்தையின் வர்த்தம் மந்தகதியில் நடைபெறுவதாக வர்த்தகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இன்று நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.45.76 முதல் ரூ.45.89க்கு இடைப்பட்ட மதிப்பில் விற்பனையானது.