தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறீயிட்டு எண்களும் அதிகரித்தன. கடந்த இரண்டு நாட்களாக இருந்த நிலை மாறியது.
பங்குச் சந்தையில் காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 484.64 புள்ளிகளும், நிஃப்டி 138.25 புள்ளிகள் அதிகரித்தன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 1,201.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 1,192.20 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
அமெரிக்காவின் நிதி மற்றும் முதலீடு நிறுவனங்களின் நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருந்த இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று மதியத்திற்கு பிறகு நிலைமை சீரானது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இந்திய வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. பொதுத்துறை வங்கிகள் முதலீடு செய்யவில்லை என அறிவித்தார். அத்துடன் இந்தியாவில் வங்கிகளில் பணப்புழக்கம் தேவையான அளவு இருக்க, ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
நிதியமைச்சரின் உறுதிமொழி பங்குச் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
காலை 10.35 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 112.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4150.85 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 406.30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 13,721.90 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 107.77, பி.எஸ்.இ. 500- 135.55, சுமால் கேப் 116.11 புள்ளி அதிகரித்தது.
ஆசிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் அதிகரித்தன. ஹாங்காங்கின் ஹாங்செங் 1,146.57, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 67.32, ஜப்பானின் நிக்கி 411.68, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 102.04, சீனாவின் சாங்காய் 180 பிரிவு 397.71 புள்ளிகள் அதிகரித்தன. மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.
நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண் அதிகரித்தது. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறைந்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, வங்கி பிரிவு, பெட்ரோலிய நிறுவனங்கள் உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
இன்று வாரத்தின் இறுதி நாள் ஆகையால் பங்குச் சந்தைகளில் அதிக பாதிப்பு இருக்காது என்று தெரிகிறது.