மும்பை: தங்கம், வெள்ளி விலை உயர்வு!
திங்கள், 15 செப்டம்பர் 2008 (13:37 IST)
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.255ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.10ம் அதிகரித்துள்ளது.
சர்வதேச பங்குச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 755.00/755.20 ஆக இருந்தது 780.00/780.50 டாலர்களாக அதிகரித்துள்ளது.
இதேபோல் பார் வெள்ளியின் விலையில் அதிகரித்து வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 10.69/10.70 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 10.92/10.93 டாலர்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,740 (நேற்று முன்தினம் ரூ.11,490)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,670 (ரூ.11,425)
வெள்ளி (10 கிராம்): ரூ.19,130 (ரூ.19,015)