பங்குச் சந்தையில் சரிவு!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (11:23 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் கடுமையாக சரிந்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் இன்று பாதிக்கப்பட்டன.

பெட்ரோலிய, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பான ஓபெக் கூட்டம், இன்று வியன்னாவில் நடைபெறுகிறது. சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதன் விலை சரிவை தடுத்து நிறுத்த, இந்த கூட்டத்தில் உற்பத்தியை குறைக்கும் முடிவு எடுக்கப்படலாம். இவை 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றன.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்தே, கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருக்கும்.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 201.77 புள்ளி குறை‌ந்து குறியீட்டு எண் 14,743.20 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 56.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4425.50 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 29.53, சுமால் கேப் 15.83, பி.எஸ்.இ. 500- 62.82 புள்ளி சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 695 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 1065 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 62 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்