இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 46 பைசா உயர்வு!

திங்கள், 8 செப்டம்பர் 2008 (13:48 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 46 பைசா உயர்ந்தது.

அன்னியசசெலாவணி சந்தை கட‌ந்த வெ‌ள்‌ளிய‌ன்று நிறைவடையும் போது ரூ.44.64/65 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.44.18/19 ஆக இரு‌ந்தது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு என்.எஸ்.ஜி கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளதும், இந்திய பங்குச்சந்தையில் இன்று குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவது, இந்திய ரூபாயின் உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்