பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (10:42 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன. அதற்கு பின் சிறிது முன்னேறியது.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 69.98, நிஃப்டி 25.40 புள்ளி குறைந்தது.

உலக சந்தையில் குறைந்து வந்த பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று 1 பீப்பாய் 121 டாலராக அதிகரித்தது.

ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.63% ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரம் 12.44% ஆக இருந்தது. இதனால் மீண்டும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம், வங்க ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

இன்று பங்குச் சந்தைகளில் எல்லா பிரிவும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.32 மணியளவில் 690 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 819 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 59 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 31.59 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,212.14 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.05 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4269.80 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 1.58 புள்ளி அதிகரித்தது. சுமால் கேப் 3.99, பி.எஸ்.இ. 500- 10.23 புள்ளி குறைந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.1,165.72 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,711.43 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.545.71 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.757.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.412.26 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.344.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் 21 ஆம் தேதிவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,123.45 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக.20 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.67,889.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,313.84 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 1.60 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 12.78, எஸ் அண்ட் பி 3.18 புள்ளி அதிகரித்தது. நாஸ்டாக் 8.70 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இந்தோனேஷியா, சிங்கப்பூர் பங்குச் சந்தை அதிகரித்தது. ஹாங்காங்கில் புயல் எச்சரிக்கையால் பங்குச் சந்தை விடுமுறை. மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 0.72 ஜகார்த்தா காம்போசிட் 30.17 புள்ளி அதிகரித்தது.


சீனாவின் சாங்காய் காம்போசிட் 62.70, ஜப்பானின் நிக்கி 76.01, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 27.55, தைவான் வெயிட் 28.31, பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் 3.74 புள்ளி குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்