மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சரியத் துவங்கிய குறியீட்டு எண்கள் கடைசி வரை சிறிது கூட உயரவில்லை. இறுதி வரை எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 434.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,243.73 ஆக சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 131.90 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,283.90 ஆக குறைந்தது.
ஐரோப்பாவில் பிரிட்டன் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. மாலை 5.15 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 4.30 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 733 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,915 பங்குகளின் விலை குறைந்தது, 65 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி, ரியல் எஸ்டேட், பொதுத்துறை நிறுவனங்கள், மின் உற்பத்தி, நுகர்வோர் பொருள், உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு பங்குகளின் விலை குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 118.91, சுமால் கேப் பிரிவு 129.21, பி.எஸ்.இ 100- 223.91, பி.எஸ்.இ 200- 50.52, பி.எஸ்.இ.-500 155.47 புள்ளிகள் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 203.75, சி.என்.எக்ஸ். ஐ.டி. 95.30, பாங்க் நிஃப்டி 314.75, சி.என்.எக்ஸ்.100- 124.95, சி.என்.எக்ஸ். டிப்டி 94.10, சி.என்.எக்ஸ். 500- 102.90, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 123.65, மிட் கேப் 50- 54.70 புள்ளிகள் குறைந்தது.
நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் கேரின் 1.80%, ரான்பாக்ஸி 1.70%, ஏ.பி.பி. 0.13% உயர்ந்தது.
எஸ்.பி.ஐ. 6.95%, ஹெச்.டி.எப்.சி. வங்கி 5.80%, என்.டி.பி.சி. 5.66%, டி.எல்.எப். 5.63%, ரிலையன்ஸ் இன்ப்ரா 5.40% குறைந்தது.