சென்செக்ஸ் 102 – நிஃப்டி 25 புள்ளி சரிவு!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:18 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. மதியம் இரண்டு மணிக்கு பிறகு சிறிது உயர தொடங்கின.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 101.93 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,543.73 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 24.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,368.25 ஆக குறைந்தது.

ஐரோப்பாவில் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன. மாலை 5.00 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 80.30 புள்ளிகள் குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,107 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,514 பங்குகளின் விலை குறைந்தது, 90 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 15.48, சுமால் கேப் பிரிவு 23.87இ பி.எஸ்.இ 100- 47.85இ பி.எஸ்.இ 200- 10.52 பி.எஸ்.இ.-500 31.32 புள்ளி குறைந்தது.


தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 59.65, சி.என்.எக்ஸ். ஐ.டி மட்டும் 21.40, பாங்க் நிஃப்டி 22.65, சி.என்.எக்ஸ்.100- 24.60, சி.என்.எக்ஸ். டிப்டி 43.95, சி.என்.எக்ஸ் 500- 18.55, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 16.50, மிட் கேப் 50- 01.35 புள்ளிகள் குறைந்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ஹிண்டால்கோ 2.32%, ரிலையன்ஸ் இன்ஃப்ரா 2.13, நேஷனல் அலுமினியம் 2.06%, ரிலையன்ஸ் பெட்ரோலியம் 1.92%, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 1.92% சுல்ஜான் 1.90% உயர்ந்தது.

ஏ.சி.சி. 5.73%, ஐடியா 5.05%, மாருதி 3.69%, சத்யம் கம்ப்யூட்டர் 3.45%, ஹெச்.டி.எப்.சி. 3.34% விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்