பங்குச் சந்தைகளில் சரிவு

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (10:51 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 115.04, நிஃப்டி 28.65 புள்ளி சரிந்தது.

அந்நிய நாடுகளில் பங்குச் சந்தையில் நேற்று பாதகமான நிலை இருந்தது. இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் காலையிலேயே குறியீட்டு எண்கள் குறைந்தன. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையையும் பாதித்தது. கடந்த மூன்று நாட்களாக இருக்கும் நிலையே இன்றும் தொடரும் என்று தெரிகிறது.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் நண்பகலுக்கு பிறகு நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு உண்டு.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.40 மணியளவில் 591 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1254 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 63 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 159.81 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,485.85 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 36.05 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4357.00 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 42.13, சுமால் கேப் 34.88, பி.எஸ்.இ. 500- 52.65 புள்ளி குறைந்தது.

வங்கி, உலோக உற்பத்தி, வாகன உற்பத்தி, மின் உற்பத்தி பிரிவு பங்குகள் பாதிக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக தகவல் தொழில் நுட்ப துறை பிரிவு மட்டும் அதிகரித்து வந்தது. இன்று தகவல் தொழில்நுட்ப துறையும் பாதிக்கப்பட்டது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.1,682.95 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,158.45 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.475.50 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.633.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.504.44 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.128.91 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் 18 ஆம் தேதிவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 2,414.05 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக.18 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.66,180.06 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 45,953.46 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஐரோப்பாவில் நேற்று ஆஸ்திரியா, இத்தாலி, நெதர்லாந்து தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 4.60 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 180.51, எஸ்&பி 500-19.60, நாஸ்டாக் 35.54, புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சீனா தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

சீனாவின் சாங்காய் காம்போசிட் மட்டும் 4.26 புள்ளி அதிகரித்தது.

ஜப்பானின் நிக்கி 321.89, ஹாங்காங்கின் ஹாங்செங் 115.88, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 34.60 தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 30.53, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 24.75, தைவானின் தைவான் வெயிட் 62.63, புள்ளி குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்