பங்குச் சந்தைகளி‌ல் ஏற்ற இறக்கம்

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (10:50 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 54.61, நிஃப்டி 29.05 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பான் தவிர மற்றவைகளில் பாதகமான நிலை இருந்தது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 12.44 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. இத்துடன் பொருளாதாக வளர்ச்சி விகிதமும் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஜீலை மாதத்துடன் முடிந்த காலாண்டில் தொழில் துறை உற்பத்தி குறைந்துள்ளது

இவை இந்திய பங்குச் சந்தையை பாதிக்கும் அம்சங்களாக உள்ளன. அத்துடன் கடந்த வாரம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால் அமெரிக்காவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் மெக்ஸிகோவில் எண்ணெய் துரப்பண கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் புயல் வீசும் அபாயம் உள்ளது. இங்கு உற்பத்தி குறையும் என அஞ்சப்படுகிறது. இதனால் வெள்ளிக் கிழமை கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 114.51 டாலராக அதிகரித்தது.

காலையில் மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் சரிந்த குறியீட்டு எண்கள், சுமார் 10.25 மணியளவில் அதிகரிக்க துவங்கின.

ஆனால் இன்று இதே நிலை நீடிக்காது என்றே தெரிகிறது இன்று பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதற்கே வாய்ப்பு உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 1002 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 639 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 47 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 240.55 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,852.57 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 62.95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4466.10 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 62.15 சுமால் கேப் 40.85 பி.எஸ்.இ. 500- 86.17 புள்ளி குறைந்தது.

ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்போர் பொருட்கள், மின் உற்பத்தி, வாகன உற்பத்தி, பொதுப்துறை பிரிவு பங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வியாழக் கிழமை நடந்த வர்த்தகத்தில் ரூ.1,752.94 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,326.92 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.573.96 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.812.05 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.788.73 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.23.32 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் 14 ஆம் தேதிவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,938.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக.14 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.65,704.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 45,824.55 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஐரோப்பாவில் வெள்ளிக் கிழமை பிரிட்டன் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 42.60 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 43.97, எஸ்&பி 500-5.27 புள்ளி அதிகரித்தது. நாஸ்டாக் 1.15 புள்ளி குறைந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜப்பான் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

ஜப்பானின் நிக்கி 202.41 புள்ளி அதிகரித்தது.

ஹாங்காங்கின் ஹாங்செங் 246.11, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 10.90, சீனாவின் சாங்காய் காம்போசிட் 77.05, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 6.98, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 21.49 தைவானின் தைவான் வெயிட் 189.07 புள்ளி குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்