தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 175.24, நிஃப்டி 47.80 புள்ளி குறைந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் மட்டுமல்லாமல் நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலை இருந்தது.
இன்று காலையில் ஆசிய நாடுகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் முதலீடு செய்வது பற்றிய விதிமுறைகளை பற்றி இன்று செபி ஆலோசனை நடத்த உள்ளது.
இதன் முடிவுகள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நேற்று மத்திய அரசு வெளியிட்ட தொழில் துறை வளர்ச்சி பற்றிய புள்ளி விபரத்தை வெளியிட்டது. இதில் தொழில் துறை வளர்ச்சி குறைந்துள்ளதால், பல நிறுவனங்களின் இலாபம் குறைய வாய்ப்புள்ளது.
இது போன்ற காரணங்களினால் பங்குகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.32 மணியளவில் 851 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 870 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 67 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 103.53 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,108.60 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 25.50 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4526.75 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 36.72, சுமால் கேப் 10.75 புள்ளி அதிகரித்தது. ஆனால் பி.எஸ்.இ. 500- 16.24 புள்ளி குறைந்தது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.2,445.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,132.79 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இவை நேற்று ரூ.687.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,151.50 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,159.15 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இவை நேற்று ரூ.7.65 கோடி மதிப்புள்ள விற்பனை செய்துள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 449.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக.12 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.64,215.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பாவில் நேற்று பெல்ஜியம், நெதர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 7.30 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 139.88, நாஸ்டாக் 9.34, எஸ்&பி 500-15.73 புள்ளி குறைந்தது.
இன்று ஆசிய நாடுகளில் இந்தோனேஷியா தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன.
ஜப்பானின் நிக்கி 301.97, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 16.28, தைவானின் தைவான் வெயிட் 30.17, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 18.38, ஹாங்காங்கின் ஹாங்செங் 144.44, சீனாவின் சாங்காய் காம்போசிட் 62.51 புள்ளி குறைந்தது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 11.87 புள்ளி அதிகரித்தது.