சென்செக்ஸ் 51, நிஃப்டி 4 புள்ளி உயர்வு!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (16:47 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், கடைசி அரை மணி நேரத்தில் அதிகரித்தன. காலையில் இருந்து குறியீட்டு எணகள் குறைந்து இருந்தாலும், அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 50.57 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,167.82 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 3.65 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,529.50 ஆக அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் 4.30 மணி நிலவரப்படி இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 1.40 புள்ளி குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1323 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,405 பங்குகளின் விலை குறைந்தது, 71 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 5.37, சுமால் கேப் 14.75, பி.எஸ்.இ. 100- 22.18, பி.எஸ்.இ. 200-4.91, பி.எஸ்.இ.-500 15.52 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, வங்கி, பொதுத்துறை பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 22.35, பாங்க் நிஃப்டி 84.35, சி.என்.எக்ஸ்.100- 6.50, சி.என்.எக்ஸ். 500- 9.30, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 30.50 மிட் கேப் 50- 12.35 புள்ளிகள் அதிகரித்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி 59.50 சி.என்.எக்ஸ். டிப்டி 8.90 புள்ளி குறைந்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் ஸ்டெர்லைட் இன்டஸ்டிரிஸ் 4.04%, ஓ.என்.ஜி.சி 3.86% சிப்லா 3.46% ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 3.34%, லார்சன் அண்ட் டூப்ரோ 2.82% டாக்டர் ரெட்டி 2.64% அதிகரித்தது.

கேரின் இந்தியா 5.13%, பி.பி.சி.எல் 3.70%, சீமென்ஸ் 3.33%, இன்போசியஸ்2.70% விப்ரோ 2.66% விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்