தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.
காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 20.11 புள்ளி குறைந்தும், நிஃப்டி 4 புள்ளி அதிகரித்தும் இருந்தது.
உலக சந்தையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை நேற்று அதிகரித்தது. துருக்கியில் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட விபத்தால் கச்சா எண்ணெய் கிடைப்பது பாதிக்கப்படும். நியூயார்க் சந்தையில் செப்டம்பர் மாத கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.44 டாலர் அதிகரித்தது. அத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் மூன்றாவது காலாண்டில் நஷ்ட கணக்கை வெளியிட்டன. இதனால் நேற்று அமெரிக்க பங்குச் சந்தையிலும் குறைந்தது.
மத்திய அரசு நேற்று பணவீக்கம் 12 விழுக்காட்டை தாண்டிவிட்டது என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன. நண்பகலுக்கு பிறகு நிலைமை சீரடைவதற்கான வாய்ப்பு உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 931 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 846 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 59 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 139.17 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,978.08 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 31.95 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4492.20 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 0.38 பி.எஸ்.இ. 500- 37.39 புள்ளி குறைந்தது. சுமால் கேப் மட்டும் 17.65 புள்ளி அதிகரித்தது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.2,338.41 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,561.60 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இவை நேற்று ரூ.223.19 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.735.76 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.711.66 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இவை நேற்று ரூ.24.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 99.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63.666.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பாவில் நேற்று சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 8.60 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 224.64, நாஸ்டாக் 22.64, எஸ்&பி 500-23.13 புள்ளி குறைந்தது.
இன்று ஆசிய நாடுகளில் ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகியவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.
ஜப்பானின் நிக்கி 65.06, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 6.40, தைவானின் தைவான் வெயிட் 192.00 புள்ளி அதிகரித்தது.
சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 14.56, சீனாவின் சாங்காய் காம்போசிட் 6.47, ஹாங்காங்கின் ஹாங்செங் 3.26, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 0.60 புள்ளி குறைந்தது.