சென்செக்ஸ் 69, நிஃப்டி 19 புள்ளிகள் உயர்வு!

வியாழன், 31 ஜூலை 2008 (17:40 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் இருந்தே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 68.54 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,355.75 ஆக உயர்ந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நெதர்லாந்து, பெல்ஜியம் தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இந்திய நேரப்படி மாலை 5.03 மணியளவில் பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ.100- 32 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 19.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4332.95 ஆக அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,296 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,326 பங்குகளின் விலை குறைந்தது, 75 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 13.64 சுமால் கேப் 14.81 புள்ளி குறைந்தது.

அதே நேரத்தில் பி.எஸ்.இ.100- 23.69, பி.எஸ்.இ. 200-4.10, பி.எஸ்.இ-500 11.45 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு குறியீட்டு எண்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 11.20, பாங்க் நிஃப்டி 10.60, சி.என்.எக்ஸ்.100- 16.85, சி.என்.எக்ஸ். டிப்டி 7.65, சி.என்.எக்ஸ். 500- 6.95, புள்ளிகள் அதிகரித்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி. 28.05, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 27.75, மிட் கேப் 50- 28 புள்ளிகள் குறைந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் சீமென்ஸ் 4.52%, டி.எல்.எப். 4.46% டாடா ஸ்டீல் 3.96%, டாடா பவர் 3.90%, கைரான் 2.813%, ஹீரோ ஹோன்டா 2.70% செயில் 2.66% அதிகரித்து.

ஜூ டெலிபிலிம் 5.23%, பவர் கிரிட் 3.51%, நேஷனல் அலுமினியம் 3.07%, டாடா மோட்டார்ஸ் 2.96%, பஞ்சாப் நேஷனல் வங்கி 2.84%, டாக்டர் ரெட்டி 2.80%, குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்