சென்செக்ஸ் 74, நிஃப்டி 20 புள்ளிகள் உயர்வு!

திங்கள், 28 ஜூலை 2008 (18:51 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் இறுதி வரை எல்லா பிரிவு பங்குவிலைகளிலும் அதிக அளவு மாற்றம் இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 74.17 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,349.11 ஆக உயர்ந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. இந்திய நேரப்படி மாலை 4.46 மணியளவில் பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ.100- 21.70 புள்ளிகள் குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20.25 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4332.10 ஆக உயர்ந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,767 பங்குகளின் விலை அதிகரித்தது, 848 பங்குகளின் விலை குறைந்தது, 77 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 58.19, சுமால் கேப் 134.20, பி.எஸ்.இ100- 33.23, பி.எஸ்.இ. 200-9.24, பி.எஸ்.இ.-500 33.22 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

உலோக உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, வாகன உற்பத்தி பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 39.40, சி.என்.எக்ஸ். ஐ.டி 6.95, பாங்க் நிஃப்டி 1.90, சி.என்.எக்ஸ்.100- 19.80, சி.என்.எக்ஸ். டிப்டி 9.85, சி.என்.எக்ஸ். 500- 16.95, சி.என்.எக்ஸ். மிட் கேப் 41.40, மிட் கேப் 50- 11.25 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் லார்சன் அண்ட் டூப்ரோ பங்கு விலை 3.73%, ஏ.சி.சி 3.34%, ஓ.என்.ஜி.சி. 3.00%, ரான்பாக்ஸி லேப் 3.00%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 1.82% அதிகரித்து.

டாடா ஸ்டீல் 2.26 6.91%, ஹின்டால்கோ 2.21%, எஸ்.பி.ஐ 2.12%, மகேந்திரா அண்ட் மகேந்திரா 1.98% குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்