சென்செக்ஸ் 512, ‌நிஃ‌ப்டி 122 பு‌ள்‌‌ளிக‌ள் ச‌ரிவு!

வெள்ளி, 25 ஜூலை 2008 (16:48 IST)
மும்பை பங்குச்சந்தை‌யி‌ல் சென்செக்ஸ் குறியீடு இன்றைய சந்தை நிறைவின் போது 512 புள்ளிகள் சரிந்து 14,275 ஆக நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை‌யி‌ல் நிஃப்டி குறியீடு 122 புள்ளிகள் குறைந்து 4,312 ஆக இருந்தது.

பங்குவர்த்தகம் காலை துவங்கிய போது 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் குறியீடு தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே சிறிய ஏற்றத்தாழ்வுடன் பயணித்தது. ஒரு கட்டத்தில் 566 புள்ளிகள் குறைந்து 14,210 வரை சென்ற சென்செக்ஸ், சந்தை நிறைவுக்கு முன் சற்றே உயர்ந்து 14,275 ஆக நிலைப்பெற்றது.

சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் பங்குகளில் காணப்பட்ட விலைசரிவே சென்செக்ஸ் குறியீடு வீழ்ச்சிக்கு காரண‌‌ம் எ‌ன்று கூறப்படுகிறது. வங்கி, ரியஸ் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் இன்று கடும் விலை சரிவை சந்தித்துள்ளன.

மும்பை பங்குச்சந்தையில் இன்று விற்கப்பட்ட 2,691 நிறுவனப் பங்குகளில் 1,450 நிறுவனங்கள் விலை சரிந்துள்ளன. 1,164 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

ஐசிஐசிஐ வங்கிப் பங்கு 9.6% சரிந்து ரூ.657 ஆகவும், ஹெச்டிஎப்சி வங்கிப் பங்கு 9% சரிந்து ரூ.1,127 ஆகவும், எஸ்பிஐ பங்குகள் 2% சரிந்து ரூ.1,449 ஆகவும் இருந்தன.

ரிலையன்ஸ் இன்ஃப்ரா பங்குகள் 4% விலை குறைந்து ரூ.985 ஆகவும், டிஎல்எப் பங்குகள் 3.2% சரிந்து ரூ.491 ஆகவும் குறைந்தன.

எனினும், ரான்பாக்ஸி பங்குகள் 3 ‌விழு‌க்காடு உயர்ந்து ரூ.481 ஆகவும், ஏசிசி பங்குகள் 2.4 ‌விழு‌க்காடு உயர்ந்து ரூ.574 ஆகவும் இருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்