சென்செக்ஸ் 254, நிஃப்டி 81 புள்ளி உயர்வு!

செவ்வாய், 22 ஜூலை 2008 (17:25 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் அதிக வித்தியாசத்துடன் இருந்தாலும் இறுதியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

சென்செக்ஸ் 14 ஆயிரமாக உயர்ந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 254.26 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,104.20 ஆக அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன. இந்திய நேரப்படி மாலை 4.55 மணியளவில் அதிகரித்தன. பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 116.70 புள்ளி குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 80.60 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4240.10 ஆக அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1849 பங்குகளின் விலை அதிகரித்தது, 734 பங்குகளின் விலை குறைந்தது, 74 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 89.04, சுமால் கேப் 98.44, பி.எஸ்.இ100- 157.33, பி.எஸ்.இ 200-36.35, பி.எஸ்.இ-500 111.87 புள்ளி அதிகரித்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் மின் உற்பத்தி, உலோக உற்பத்தி , வங்கி, நுகர்வோர் பொருட்கள், பொதுத் துறை பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 214.30, பாங்க் நிஃப்டி 192.20, சி.என்.எக்ஸ்.100- 83.70, சி.என்.எக்ஸ். டிப்டி 72.80, சி.என்.எக்ஸ்.500- 66.10, சி.என்.எக்ஸ். மிட் கேப் 104.40, மிட் கேப் 50- 39.90, சி.என்.எக்ஸ். ஐ.டி 99.45 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் யூ.பி.ஹாலிடே-இன் 18.06%, யூனைடெட் எஸ்.பி 16.52%, கிரேட் ஆப் 9.76%, டெக் மகேந்திரா 9.65%, செயில் 7.40%, டாடா பவர் 6.80%, பி.ஹெச்.இ.எல்6.05% ஐ.டி.சி 5.94%, ரிலையன்ஸ் இன்ப்ரோ 6.94%, விப்ரோ 5.83%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4.73%, சிப்லா 4.69%, பஙகு விலைகள் அதிகரித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்