பணவீக்கம் 11.91 விழுக்காடாக உயர்வு!

பணவீக்கம் ஜுலை 5 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.91 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு பணவீக்கம் 5.5 விழுக்காடாக இருக்கும் என்று கணித்திருந்தது. இந்த கணிப்பிற்கு மாறாக தொடர்ந்து 22 வாரமாக பணவீக்கம் அதிகமாக இருக்கின்றது.

ஜூன் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11,89 புள்ளியாக இருந்தது. அடுத்த வாரத்தில் 0.02 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் சில உணவுப் பொருட்கள், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பெட்ரோலிய பொருட்களான பர்னேஷ் ஆயில், நாப்தா, விமான பெட்ரோல், அதிவேக டீசல் ஆகியைகளின் விலை அதிகரித்ததே.

இதற்கு முந்தைய ஆண்டு இதே கால கட்டத்தில் பணவீக்கம் 4.61 விழுக்காடாக இருந்தது.

அதே நேரத்தில் ஜூலை 5 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சிமென்ட் விலை அதிகரிக்கவில்லை. பழம், காய்கறி விலை 1 விழுக்காடு குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை 0.2 விழுக்காடு குறைந்துள்ளது. உப்பு விலையும் குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்