மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சரிந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை சரிந்த வண்ணமே இருந்தன.
மும்பையின் சென்செக்ஸ் 13 ஆயிரத்திற்கும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,000க்கும் குறைந்தன.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 654.32 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 12,676.32 ஆக சரிந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளிலும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் சரிந்தன. மாலை 4.45 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்.டி.எஸ்.இ-100 133.50 புள்ளி சரிந்தது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 178.60 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 3,861.10 ஆக சரிந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 535 பங்குகளின் விலை அதிகரித்தது, 2,105 பங்குகளின் விலை குறைந்தது, 57 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 167.29, சுமால் கேப் 209.16, பி.எஸ்.இ. 100- 230.29, பி.எஸ்.இ. 200-75.26 பி.எஸ்.இ.-500 230.29 புள்ளிகள் குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவு 86.02, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 564.26, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 307.37 வாகன உற்பத்தி பிரிவு 89.21, ரியல் எஸ்டேட் பிரிவு 259.08, உலோக உற்பத்தி பிரிவு 89.21, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 266.03 மின் உற்பத்தி பிரிவு 114.91, வங்கி பிரிவு 462.52 புள்ளிகள் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 263.60, சி.என்.எக்ஸ். ஐ.டி 106.60, பாங்க் நிஃப்டி 368.80, சி.என்.எக்ஸ்.100- 168.15, சி.என்.எக்ஸ். டிப்டி 167.90, சி.என்.எக்ஸ். 500- 137.30, சி.என்.எக்ஸ். மிட் கேப் 191.05, மிட் கேப் 50- 82 புள்ளி குறைந்தது.
நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 5 பங்குகளின் விலை அதிகரித்தது, 45 பங்கு விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது, 17 பங்குளின் விலை குறைந்தது.
பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில் 12 பங்குகளின் விலையும் குறைந்தது.
நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 2 பங்குகளின் விலை அதிகரித்தது, 48 பங்குகளின் விலை குறைந்தது.