பங்குச் சந்தை திங்கட் கிழமை உயருமா?

சனி, 12 ஜூலை 2008 (14:43 IST)
திங்கட் கிழமை பங்குச் சந்தை தொடங்கும் போது அதிக மாற்றம் இருக்காது. நிஃப்டி 4040-4050 என்ற அளவில் இருக்கும். இந்த அளவில் தொடங்கினால் பங்குகள் விற்பனை செய்வதை பார்க்கலாம். ஆனால் நிஃப்டி 4095-4105 என்ற அளவில் இருக்கும். 4015 என்ற அளவிற்கு பிறகு தான் பங்குகளை வாங்க தொடங்குவார்கள். இந்த நிலை நீடித்தால் நிஃப்டி 4140-4165 என்ற அளவில் உயர வாய்ப்புண்டு.

இதற்கு மாறாக நிஃப்டி 4015-3990 என்ற அளவிற்கு குறைந்தால் பங்குகளை விற்பனை செய்ய ஆரம்பிப்பார்கள். அப்போது நிஃப்டி 3960-3945 என்ற அளவிற்கு குறையும்.

வெள்ளிக் கிழமை கண்ணோட்டம்.

பங்குச் சந்தை வெள்ளிக் கிழமை கடும் அதிர்ச்சியை சந்தித்தது. இதற்கு காரணம் பணவீக்கம், தொழில் துறை உற்பத்தி வீழ்ச்சி, இன்போசிஸ் நிறுவனத்தின் டாலர் கணக்கிலான வருவாயில் மாற்றம் இல்லாதது போன்றவைகளே. தொழில் நுட்ப பிரிவு, இயந்திர உற்பத்தி, மின் உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி, உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டன. மும்பை பங்குச் சந்தையின் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

நைஜிரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்தும், தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணாக பிரேசிலில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்பதால் விலை 3.57 விழுக்காடு உயர்ந்து 1 பீப்பாய் விலை 145.70 டாலராக அதிகரித்தது.

மே மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 3.8 விழுக்காடாக குறைந்துள்ளது. இது ஏப்ரல் மாத அளவான 6.2 விழுக்காடை விட குறைவு. பணவீக்கம் அதிகரித்துள்ளது. இது குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஜூன் 28 ஆம் நேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.89 விழுக்காடாக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 11.63 விழுக்காடாக இருந்ததது.

இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா, எல் அண்ட் டி. பி.ஹெச்.இ.எல். ஆகிய பங்குகள் அதிக அளவு விற்பனையாயின.

சென்செக்ஸ் 574 புள்ளி குறைந்து சென்செக்ஸ் 13,351, நிஃப்டி 147 புள்ளி குறைந்து 4014 வர்த்தகம் நடக்கும் போது நிஃப்டி 4014 என்ற அளவிற்கு சரிநதது. இறுதியில் சென்செக்ஸ் 456 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,456 ஆகவும், நிஃப்டி 113 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4049 ஆக முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்