கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதால் நாளை முதல் காய்கறி விலை குறையும் என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்க முன்னாள் தலைவரும், நிர்வாக கமிட்டி ஆலோசகருமான செளந்தரராஜன் கூறினார்.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் கடுமையாக விலை உயர்ந்திருந்தது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை வாங்கிச் செல்லும் சில்லறை வியாபாரிகள் இரு மடங்கு கூடுதலாக வைத்து விற்பனை செய்கிறார்கள். இது இன்று மட்டும் அல்ல, இதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் சில்லறை வியாபாரிகள்.
இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் மத்திய அரசு நேற்று நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததையடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
இது குறித்து செளந்தரராஜன் கூறுகையில், லாரிகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுக்கு வரும் லாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இதனால் காய்கறிகள் ஏராளமான வந்து குவியும். இதன் மூலம் விலைகள் கனிசமாக குறையும் என்றார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு: