மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்று முன்பேர சந்தையில் ஜூன் மாதத்தின் வர்த்தகத்திற்கு கணக்கு முடிக்கும் கடைசி நாள். இதனால் காலையில் இருந்து எல்லா பிரிவு பங்குகளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நண்பகல் 2.30 மணியளவில் குறியீட்டு எண்கள் சீராக அதிகரிக்க துவங்கின.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 201.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 14,421.82 ஆக அதிகரித்தது.
இந்திய பங்குச் சந்தைமட்டுமல்லாது, ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று ஏற்ற இறக்கமாக இருந்தது. காலையில் சீனா தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆனால் மாலையில் இந்தோனிஷியா தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தையில் இன்று பாதகமான போக்கு நிலவியது. மாலை 4.50 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 62.30 புள்ளி குறைநதது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 63.20 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4315.85 ஆக உயர்ந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1483 பங்குகளின் விலை அதிகரித்தது, 1143 பங்குகளின் விலை குறைந்தது, 72 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 71.06 பி.எஸ்.இ. 100-82.89 பி.எஸ்.இ. 200-16.75 பி.எஸ்.இ. 500- 47.95 புள்ளி அதிகரித்தது. ஆனால் மிட் கேப் பிரிவு மட்டும் 4.62 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் சி.என்.எக்ஸ். ஐ.டி 102.75 பாங்க் நிஃப்டி 31.45 சி.என்.எக்ஸ்.100- 49.40 சி.என்.எக்ஸ். டிப்டி 58.50 சி.என்.எக்ஸ். 500- 29.95 புள்ளி அதிகரித்தது.
நிஃப்டி ஜூனியர் 29.10 சி.என்.எக்ஸ். மிட் கேப் 34.95 மிட் கேப் 50- 14 புள்ளி குறைந்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,746.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,110.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,326.81 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.795.94 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 57,583.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த மாதத்தில் மட்டும் ரூ.11,088.19 கோடி மதிப்புள்ள பங்குளை விற்பனை செய்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 265.82 தகவல் தொழில் நுட்ப பிரிவு 86.91 உலோக உற்பத்தி பிரிவு 158.27 வாகன உற்பத்தி பிரிவு 33.87 நுகர்வோர் பொருட்கள் பிரிவு 85.05 பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 27.60 மின் உற்பத்தி பிரிவு 10.39 புள்ளி அதிகரித்தது.
வங்கி பிரிவு 4.22 ரியல் எஸ்டேட் பிரிவு 105.42 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 36 பங்கு விலை அதிகரித்தது, 14 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 22 பங்குகளின் விலை அதிகரித்தது, 28 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 10 பங்குகளின் விலை அதிகரித்தது, 10 பங்குகளின் விலை குறைந்தது.
பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 6 பங்கு விலை குறைந்தது. 6 பங்கு விலை அதிகரித்தது.
நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது, 36 பங்குகளின் விலை குறைந்தது.