மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்து இருந்த குறியீட்டு எண்கள் மாலை வரை அதிக அளவு குறையவில்லை. இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், வங்கி பிரிவு பங்குகளின் விலை அதிக அளவு அதிகரித்தது.
அத்துடன் காலையிலேயே மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. கடந்த வாரத்தில் பங்குகளின் விலைகள் குறைந்ததால், வாரத்தின் முதல் நாளான இன்று பங்குகளை வாங்குவார்கள். இதனால் இந்திய பங்குச் சந்தையில் சாதகமான போக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இது மாதிரியே எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 206.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,395.82 ஆக உயர்ந்தது.
இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது. இதே நிலையே மாலை வரை நீடித்தது. மாலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 437.39, சீனாவின் சாங்காய் காம்போசிட் 5.30, ஜப்பானின் நிக்கி 380.64, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 13.47 புள்ளி அதிகரித்தது.
இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜெர்மனி பங்குச் சந்தையின் குறியீட்டு எண் மட்டும் அதிகரித்தது. மற்றவை குறைந்தன. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 8.20 புள்ளி குறைந்தது.
மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 55.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4572.50 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1776 பங்குகளின் விலை அதிகரித்தது, 872 பங்குகளின் விலை குறைந்தது, 76 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 71.55, சுமால் கேப் 87.39, பி.எஸ்.இ. 100-113.62, பி.எஸ்.இ. 200-26.19, பி.எஸ்.இ. 500- 81.05 புள்ளி அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 79.35, பாங்க் நிஃப்டி 134.60, சி.என்.எக்ஸ்.100- 52, சி.என்.எக்ஸ். டிப்டி 43.85, சி.என்.எக்ஸ். 500- 44.95, சி.என்.எக்ஸ். மிட் கேப் 59.90, மிட் கேப் 50- 15.05, சி.என்.எக்ஸ். ஐ.டி 57.55 புள்ளி அதிகரித்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,724.95 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,841.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,086.03 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.628.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 54,205.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 66.77, வங்கி பிரிவு 199.39, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 84.04, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 99.05, மின் உற்பத்தி பிரிவு 40.47, உலோக உற்பத்தி பிரிவு 188.85, ரியல் எஸ்டேட் 200.64, தகவல் தொழில் நுட்ப பிரிவு 77.29 அதிகரித்தது.
வாகன உற்பத்தி பிரிவு மட்டும் 5.91, புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 38 பங்கு விலை அதிகரித்தது, 11 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் மாற்றம் இல்லை.
நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 38 பங்குகளின் விலை அதிகரித்தது, 12 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 16 பங்குகளின் விலை அதிகரித்தது, 4 பங்குகளின் விலை குறைந்தது.
பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 11 பங்குகளின் விலை அதிகரித்தது. 1 பங்குகளின் விலை குறைந்தது
நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 35 பங்குகளின் விலை அதிகரித்தது, 15 பங்குகளின் விலை குறைந்தது.