சென்செக்ஸ் 61 புள்ளிக‌ள் சரிவு!

வெள்ளி, 13 ஜூன் 2008 (17:43 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்து இருந்த குறியீட்டு எண்கள் பத்தாவது நிமிடத்திலேயே மாற தொடங்கின. இன்று நாள் முழுவதும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக மாற்றத்துடன் இருந்தன.

அத்துடன் காலையிலேயே மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் இந்திய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 60.58 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,189.62 ஆக குறைந்தது.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தது. இதே நிலையே மாலை வரை நீடித்தது. மாலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 431.56, சீனாவின் சாங்காய் காம்போசிட் 88.73 புள்ளி குறைந்தது. ஜப்பானின் நிக்கி 85.13 தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 7.99 புள்ளி அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு ஐரோப்பிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 38 புள்ளி குறைந்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 22.25 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4517.10 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,445 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,156 பங்குகளின் விலை குறைந்தது, 77 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 4.67, சுமால் கேப் 55.82 புள்ளி அதிகரித்தது. ஆனால் பி.எஸ்.இ. 100-45.89, பி.எஸ்.இ. 200-9.99, பி.எஸ்.இ. 500- 24.85 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 10.20, பாங்க் நிஃப்டி 6.20, சி.என்.எக்ஸ்.100- 19.20, சி.என்.எக்ஸ். டிப்டி 26.95, சி.என்.எக்ஸ். 500- 10.80, சி.என்.எக்ஸ். மிட் கேப் 13 மிட் கேப் 50- 15.35 புள்ளி குறைந்தது. ஆனால் சி.என்.எக்ஸ். ஐ.டி 22 புள்ளி அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,164.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,375.62 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,135.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.634.99 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 54,089.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 7.25, வங்கி பிரிவு 18.35, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 29.45 புள்ளி அதிகரித்தது.

பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 57.93, மின் உற்பத்தி பிரிவு 28.73, உலோக உற்பத்தி பிரிவு 322.72, ரியல் எஸ்டேட் 150.67 தகவல் தொழில் நுட்ப பிரிவு 9.76, வாகன உற்பத்தி பிரிவு 18.76 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 14 பங்கு விலை அதிகரித்தது, 36 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 23 பங்குகளின் விலை அதிகரித்தது. 26 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 10 பங்குகளின் விலை அதிகரித்தது. 10 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 4 பங்குகளின் விலஅதிகரித்தது. 8 பங்குகளின் விலை குறைந்தது

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 15 பங்குகளின் விலை அதிகரித்தது. 34 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்