தங்கம் வெள்ளி விலை சரிவு!

புதன், 11 ஜூன் 2008 (14:05 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாடாக இன்றும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.450ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.210ம் குறைந்தது.

தங்கம் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் காட்டாத காரணத்தினால் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மற்ற நாட்டு சந்தைகளில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் வில
1 பீப்பாய் 131.30 டாலராக குறைந்ததாலும், மற்ற அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததால், தங்கம், வெள்ளியின் விலையில் அதிக மாற்றம் ஏற்படவில்லை.

நியூயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 867.20 / 868.20 டாலராக அதிகரித்தது என்று டோக்கியோவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை அதிகரித்தது. லண்டனில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 10 டாலர் அதிகரித்தது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை குறைந்தது.

இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 884.00 / 885.00 டாலரில் இருந்து 874.00 / 875.00 டாலராக குறைந்தது.

வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 16.62/16.63 டாலரில் இருந்து 17.15/17.16 டாலராக அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,170
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,110
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,830.

வெப்துனியாவைப் படிக்கவும்