மும்பை : மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.
காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 172 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,890.61 ஆக சரிந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 46 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,694.05 ஆக சரிந்தது.
இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தையில் நேற்று குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 45.90 புள்ளி குறைந்திருந்தது.
ஆசிய, அமெரிக்க பங்குச் சந்தைகளில் பாதகமான போக்கு இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக அளவு குறைந்தன.
காலையில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 18 ஆயிரம் என்ற அளவுக்கும் குறைவாக உள்ளது. இதனால் முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பகலுக்கு பிறகு, நிஃப்டி உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.15 மணி நிலவரப்படி 222 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1224 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 19 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 94.52 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,839.91 ஆக இருந்ததது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 63.40 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4676.20 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 117.27, பி.எஸ்.இ. 500- 98.11, சுமால் கேப் 159.04 புள்ளி குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,497.04, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,846.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.349.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.699.04, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.690.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.9.81 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.46,844.69 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 134.50, நாஸ்டாக் 31.13, எஸ் அண்ட் பி 500- 14.71 புள்ளி சரிந்தது.
இன்று காலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 545.99, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 284.63 சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 32.18, சீனாவின் சாங்காய் காம்போசிட் 20.38, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 26.65 புள்ளி குறைந்தது.