மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.
இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.690ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.285 குறைந்தது.
லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 872.30/873.80 டாலராக குறைந்தது. (நேற்றை விலை 897.50/898.30). இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 16.48/ 16.52 டாலராக குறைந்தது. (நேற்றை விலை 17.40/17.42).
அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவலினாலும், வர்த்தகர்கள் அதிக அளவு தங்கம், வெள்ளியை விற்பனை செய்த காரணத்தினால் மும்பையில் தங்கம், வெள்ளி விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,160 22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,100 பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,450