பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

வெள்ளி, 30 மே 2008 (10:54 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் இதே நிலை நீடிக்கவில்லை. தேசிய பங்குச் சந்தையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு பங்கு விலைகளும் அதிக மாற்றத்துடன் உள்ளது.

காலையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் உயர்ந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக இருப்பது போலவே, இன்றும் அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 173.40 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,489.66 ஆக உயர்ந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 57.30 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4,892.50 ஆக உயர்ந்தது.


இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சீனா தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தது.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 1.50 புள்ளி குறைந்தது.

ஆசிய, அமெரிக்க பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு இருந்தாலும், இந்திய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக மாற்றத்துடன் உள்ளது. பங்குகளின் விலைகள் அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.

காலையில் வங்கி, தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, வாகன உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.30 மணி நிலவரப்படி 949 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது, 827 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன, 64 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 92.33 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,408.59 ஆக உள்ளது.


இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 36.10 புள்ளி உயர்ந்து குறியீட்டு எண் 4871.40 ஆக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 32.36, சுமால் கேப் 19.83, பி.எஸ்.இ. 500- 8.44 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.4,242.32, கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.5,519.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.1,277.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,033.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,033.12 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.698.00 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.46,601.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 52.19, நாஸ்டாக் 21.62, எஸ்.பி.-500 7.42 புள்ளி அதிகரித்தது.

இன்று காலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 133.64, ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 177.48, தென் கொரியாவினசியோலகாம்போசிட் 4.73, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 17.59, புள்ளி அதிகரித்து இருந்தது.

ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 9.28 புள்ளி குறைந்து இருந்தது.

இன்று வாரத்தின் கடைசி நாளாகவும், மாதத்தின் கடைசி நாளாக இருப்பதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் உட்பட இலாப கணக்கு பார்ப்பார்கள்.

அத்துடன் மத்திய அரசு வர்த்தக, தொழில் நிறுவனங்கள் அந்நிய நாடுகளில் வாங்கும் கடன் உச்சவரம்பை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பங்குகளின் விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்