சென்செக்ஸ் 257 புள்ளிகள் சரிவு!

வெள்ளி, 23 மே 2008 (17:40 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறைந்த குறியீட்டு எண்கள், நண்பகல் 1 மணிக்கு பிறகு மேலும் சரிய துவங்கின.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி முதன் முறையாக 5 ஆயிரத்திற்கும் குறைந்தது. நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17 ஆயிரத்திற்கும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 257 புள்ளிகளும், நிஃப்டி 79 புள்ளிகளும் குறைந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 257.47 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,646.64 ஆக சரிந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, ஜப்பான் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்திருந்தன. மாலை வரை இதே நிலையே நீடித்தது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ-31.40 புள்ளி குறைந்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 78.90 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 4946.55 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 795 பங்குகளின் விலை அதிகரித்தது, 1924 பங்குகளின் விலை குறைந்தது, 71 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 112.14, சுமால் கேப் 146.41, பி.எஸ்.இ. 100-136.27, பி.எஸ்.இ. 200-32.13, பி.எஸ்.இ. 500- 102.84 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 164.10, சி.என்.எக்ஸ். ஐ.டி 86.35, பாங்க் நிஃப்டி 138.25, சி.என்.எக்ஸ்.100- 78.05, சி.என்.எக்ஸ். டிப்டி 44.50, சி.என்.எக்ஸ். 500- 62.50, சி.என்.எக்ஸ். மிட் கேப் 92.15, மிட் கேப் 50- 51 புள்ளி குறைந்தது.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,226.70 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,764.05 மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,345.33 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.930.17 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.41,952.13 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நுகர்வோர் பொருட்கள் பிரிவு 149.49, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 241.28, ரியல் எஸ்டேட் 183.20, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 129.38, வாகன உற்பத்தி பிரிவு 64.93, உலோக உற்பத்தி பிரிவு 357.15, மின் உற்பத்தி பிரிவு 30.03, வங்கி பிரிவு 143.73, தகவல் தொழில் நுட்ப பிரிவு 77.25 புள்ளி குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 14 பங்குகளின் விலை அதிகரித்தது, 36 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 8 பங்குகளின் விலை அதிகரித்தது, 42 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 2 பங்குகளின் விலை அதிகரித்தது, 18 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 7 பங்குகளின் விலை அதிகரித்தது, 43 பங்குகளின் விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்