சென்செக்ஸ் 110 புள்ளி சரிவு!

திங்கள், 28 ஏப்ரல் 2008 (17:16 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்து நிமிடத்திலேயே குறைய தொடங்கின. இறுதியில் இரண்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்களும் குறைந்தன.

காலையில் இருந்து எல்லா பிரிவு பங்குகளின் விலையும் ஏற்ற இறக்கமாக இருந்தது. இறுதியில் சென்செக்ஸ் 110 புள்ளிகளும், நிஃப்டி 22.05 புள்ளிகள் குறைந்தன.

இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 110.02 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,015.96 புள்ளிகளாக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 11.19 புள்ளி உயர்ந்தது. ஆனால் பி.எஸ்.இ. 500- 17.69, சுமால் கேப் 17.90 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 22.05 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5089.65 புள்ளிகளாக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 32.75, சி.என்.எக்ஸ். மிட் கேப் 38.80, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50- 12.20 புள்ளி அதிகரித்தது.

அதே நேரத்தில் சி.என்.எக்ஸ். ஐ.டி.36.40, பாங்க் நிஃப்டி 26.25, சி.என்.எக்ஸ்.100- 15.65, சி.என்.எக்ஸ்.டிப்டி 23.90, சி.என்.எக்ஸ். 500- 5.65 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,295 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,374 பங்குகளின் விலை குறைந்தது, 71 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையினவங்கி பிரிவு 0.58%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 1.20%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.90%, தொழில்நுட்ப பிரிவு 0.17%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 1.08%, மின் உற்பத்தி பிரிவு 0.15%, உலோக உற்பத்தி பிரிவு 0.71 %, வாகன உற்பத்தி பிரிவு 0.57% குறைந்தன.

பொதுத்துறை நிறுவனங்கள் 0.53%, ரியல் எஸ்டேட் 0.22%, அதிகரித்தன.

வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,384.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,071.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதேபோல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமையன்று ரூ.898.11 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை 973.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்