பங்குச் சந்தைகளில் உயர்வு!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (10:50 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சாதகமான நிலை நிலவுகிறது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகளின் மூன்று பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.


காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 112 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,843.86 ஆக உயர்ந்து இருந்தது.

இதே போல் நிஃப்டி 50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5.050 ஆக உயர்ந்து இருந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 198.59 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,919.67 ஆக இருந்தது.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 67.15 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5067.00 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 42.82, பி.எஸ்.இ. 500- 65.82, சுமால் கேப் 49.32 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1148 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 713 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 50 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,625.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,384.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.759.16 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,358.92 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.916.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.442.88 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 85.73, எஸ்.அண்ட் பி 500-8.89, நாஸ்டாக் 23.71 புள்ளி அதிகரித்தது.

ஆசிநாட்டபங்குசசந்தைகளிலதெனகொரியாவினசியோலகாம்போசிட் 23.81, ஹாங்காங்கினஹாங்செங் 34.82, சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸ் 18.59, ஜப்பானினநிக்கி 300.67 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சாதகமான நிலை நிலவுகிறது. இதே போல் இந்திபங்குசசந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக இதே நிலை நிலவினாலும், பிற்பகலில் பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண்கள் சரிவை சந்திக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்