பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (11:12 IST)
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சென்செக்ஸ் 224 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,705.61 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 75 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 5033.40 ஆக இருந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றும் தொடர்ந்து குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அமெரிக்காவின் பங்கு சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் வெள்ளிக் கிழமையன்று அதிகரித்து இருந்தது.

அயல்நாட்டு சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து, சாதகமான நிலை நிலவுகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே, இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 242.05 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,723.25 ஆக இருந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 75.40 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5033.80 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 126.02, பி.எஸ்.இ. 500- 104.88, சுமால் கேப் 157.27 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1631 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 384 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 41 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், வங்கி பிரிவு உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்கள் 1 முதல் 2 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தன.

வெள்ளி‌க் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,044.04 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. ரூ.3,446.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.597.53 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.050.23 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,110.10 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.59.87 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 228.87, எஸ்.அண்ட் பி 500-24.77, நாஸ்டாக் 61.14 புள்ளி அதிகரித்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 28.37, ஹாங்காங்கின் ஹாங்செங் 603.05, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 60.46, ஜப்பானின் நிக்கி 225.96, சீனாவின் சாங்காய் காம்போசிட் 129.75 புள்ளி அதிகரித்து இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்