பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (11:07 IST)
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,494 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 4952 ஆக இருந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றும் தொடர்ந்து குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அமெரிக்காவின் பங்கு சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன. அதே போல் ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 180.92 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 16,425.11 ஆக இருந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 51 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4938.30 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 96.20, பி.எஸ்.இ. 500- 81.80, சுமால் கேப் 111.09 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1665 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 483 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 37 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், வங்கி பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்கள் 2 முதல் 4 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தன. அமெரிக்கா உட்பட எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான போக்கு நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் பங்குகளை வாங்குவது, விற்பனை செய்வது என்ற போக்கு இருக்கும். இதனால் விலைகளில் அடிக்கடி மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 256.80, எஸ்.அண்ட் பி 500-30.28, நாஸ்டாக் 64.07 புள்ளி அதிகரித்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 12.44, ஹாங்காங்கின் ஹாங்செங் 503.02, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 60.74, ஜப்பானின் நிக்கி 265.63 அதிகரித்து இருந்தது.

ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் மட்டும் 35.05 புள்ளி குறைந்து இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்