காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன. சென்செக்ஸ் 113, நிஃப்டி 60 புள்ளிகள் குறைந்தன.
அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் குறைந்தன. அதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையும் குறைந்தது. பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிக அளவு குறைந்தது. இன்போசியஸ் நிறுவனத்தின் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டு இலாப-நஷ்ட கணக்கு வெளியானது. இது பங்குச் சந்தைக்கு சிறிது ஊக்கமளிப்பதாக இருந்தது. இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 113 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 15,694.41 ஆக இருந்தது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 60 புள்ளிகள் குறைந்து 4,717.90 ஆக இருந்தது.
இந்திய பங்குச் சந்தையில் மட்டுமல்லாமல் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்தன. அமெரிக்க பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாம் நாளாக குறியீட்டு எண்கள் குறைந்தன.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 19.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,788.19 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5.35 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4783.15 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 13.23, பி.எஸ்.இ. 500- 7.14, சுமால் கேப் 29.18 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் 1092 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 944 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 50 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. வங்கி, பெட்ரோலிய நிறுவனங்கள், உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்து இருந்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலைகள் மாறுவதால் குறியீட்டு எண்களும் அடிக்கடி மாற்றம் அடைகின்றன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 23.36, எஸ்.அண்ட் பி 500-4.51 நாஸ்டாக் 14.42 புள்ளி குறைந்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 0.44, ஹாங்காங்கின் ஹாங்செங் 12.83, சீனாவின் சாங்காய் காம்போசிட் 121.75 புள்ளி குறைந்தது.
அதே நேரத்தில் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 9.23, ஜப்பானின் நிக்கி 85.11, 133.80 புள்ளி அதிகரித்து இருந்தது.