காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 120 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,712 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,757 ஆக இருந்தது.
இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலையில் வர்த்தகம தொடங்கியதில் இருந்தே, குறியீட்டு எண்கள் குறைந்து வருகின்றன.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ், பி.எஸ்.இ. 500 பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் சிறிது அதிகரித்தன.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால் இன்று குறியீட்டு எண்கள் குறைந்து வருகின்றன.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 109.69 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,777.86 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி14.75 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,756.85 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 12.47, சுமால் கேப் 01.85 புள்ளிகள் அதிகரித்து இருந்தன. ஆனால் பி.எஸ்.இ. 500 - 19.84 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் 1068 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 925 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 56 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 20.20, நாஸ்டாக் 01.90 புள்ளி அதிகரித்தது.
ஆனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 01.37, சீனாவின் சாங்காய் காம்போசிட் 229.14, ஹாங்காங்கின் ஹாங்செங் 392.20 புள்ளிகள் புள்ளி அதிகரித்து இருந்தது.
ஆனால் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 09.06, ஜப்பானின் நிக்கி 119.94 குறைந்து இருந்தது.