மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை சரிந்தன. இந்த நிதி ஆண்டின் கடைசி நாளான இன்று, பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் சரிவு இருந்தது.
ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் குறைந்தது.
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 726.85 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,644.44 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 207.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,734.50 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 60.36, மிட் கேப் 94.97, பி.எஸ்.இ. 500- 238.20 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 321.25, சி.என்.எக்ஸ். ஐ.டி. 199.75, பாங்க் நிஃப்டி, 382.85, சி.என்.எக்ஸ். 100-196.70, சி.என்.எக்ஸ். 500-145.30, சி.என்.எக்ஸ். டிப்டி 189.45, சி.என்.எக்ஸ். மிட் கேப் 112.70, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50-46.90 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,365 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,291 பங்குகளின் விலை குறைந்தது, 43 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 5.39%, மின் உற்பத்தி பிரிவு 3.40%, உலோக உற்பத்தி பிரிவு 4.31%, பொதுத்துறை நிறுவனங்கள் 3.67%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 5.60%, வாகன உற்பத்தி பிரிவு 1.215%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 3.09%, தொழில்நுட்ப பிரிவு 3.93%, வங்கி பிரிவு 5.89%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 4.31% குறைந்துள்ளன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 26 பங்குகளின் விலை குறைந்தது.
விலை அதிகரித்த பங்குகள்:
அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை அதிகரித்த விலை விவரம் :