பங்குச் சந்தைகளில் சரிவு!

திங்கள், 31 மார்ச் 2008 (11:09 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டபங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்களசரிந்தன.

இன்று காலை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதசென்செக்ஸ் 280 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 16,091.02 ஆக குறைந்தது. வெள்ளிக் கிழமை சென்செக்ஸ் 356 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சரிவுடன் துவங்கியது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 78.75 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,863.25 ஆக குறைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் முதலீட்டு நிறுவனங்கள் லாப கணக்கை பார்ப்பதற்காக அதிக அளவு பங்குகளை விற்பனை செய்கின்றனர். குறிப்பாக வங்கி பிரிவு பங்குகளை விற்பனை செய்கின்றனர்.

மற்ற நாடுகளில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் பிரதிபலிப்பு தான், இந்திய பங்குச் சந்தையும் சரிவதற்கு காரணம். இதனால் சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டு எண்களும் சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 392.77 புள்ளிகளசரிந்து குறியீட்டஎண் 15,978.52 ஆக குறைந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 102.70 புள்ளிகளசரிந்து குறியீட்டு எண் 4839.30 ஆக சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 27.78, பி.எஸ்.இ.500-114.61, புள்ளிகள் குறைந்தன. ஆனால் சுமால் கேப் 53.56 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிபங்குசசந்தையில் வங்கி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அதிக அளவில் குறைந்தது. மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் 1,262 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 896 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 41 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 86.0, நாஸ்டாக் 19.65,எஸ் அண்ட் பி500-10.44 புள்ளிகள் குறைந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்களும் சரிந்து இருந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 8.39, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 16.14, ஜப்பானின் நிக்கி 374, சீனாவின் சாங்காய் காம்போசிட் 183.13, ஹாங்காங்கினஹாங்செங் 445.82, புள்ளிகள் குறைந்து இருந்தது.

அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்து உள்ளன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக் கிழமை பங்கு விலைகள் குறைந்து குறியீட்டு எண்கள் குறைந்தன.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு, துவங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரிப்பது அல்லது சரிவதை பொறுத்தே இங்குள்ள பங்குச் சந்தைகளில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்