பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

வெள்ளி, 28 மார்ச் 2008 (11:32 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டபங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்களஅதிகரித்தன.

இன்று காலை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதசென்செக்ஸ் 152 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,167.95 ஆக உயர்ந்தது. நேற்று சென்செக்ஸ் 71 புள்ளிகள் குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 58.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,888.85 ஆக அதிகரித்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா வங்கி, வாகன உற்பத்தி பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 40.61 புள்ளிகளஅதிகரித்து குறியீட்டஎண் 16,065.17 ஆக அதிகரித்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 20.25 புள்ளிகளஅதிகரித்து குறியீட்டு எண் 4850.50 ஆஅதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 103.89, பி.எஸ்.இ.500-53.14,சுமால் கேப் 195.63 புள்ளிகள் அதிகரித்தன.

தேசிபங்குசசந்தையில் வங்கி பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் 1,842 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 411 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 28 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்திய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குளின் விலைகளும் அதிக மாற்றத்துடன் உள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 120.40, நாஸ்டாக் 43.53 புள்ளிகள் குறைந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 24.27, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 22.44, ஜப்பானின் நிக்கி 233.18 சீனாவின் சாங்காய் காம்போசிட் 183.39, ஹாங்காங்கினஹாங்செங் 288.86 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

அமெரிக்கா பங்குச் சந்தையில் சரிவு இருந்தாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்து உள்ளன. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று அதிகரித்து இருந்தது. இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு, துவங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் போக்கை வைத்தே, இங்குள்ள பங்குச் சந்தைகளின் செயல்பாடுகள் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்