பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!

புதன், 26 மார்ச் 2008 (11:24 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டபங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்களஅதிகரித்தன.

ஆனால் அதற்கு பிறகு ஏற்ற இறக்கம் காணப்பட்டது. நேற்று விலை அதிகரித்த பங்குகளை விற்பனை செய்து இலாப கணக்கு பார்த்தனர். இதனால் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் அதிகளவு மாற்றம் இருந்தது.

காலை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 53 புள்ளி, நிஃப்டி 34.80 புள்ளி அதிகரித்து இருந்தன.

அமெரிக்கா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஒரே நிலையாக இல்லாமல், அதிக மாற்றத்துடன் உள்ளன. இதே நிலை இங்கும் தொடர வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 53 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 16,271.06 ஆக அதிகரித்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 25.50 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டு எண் 4903.00 ஆஉயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 116.49, சுமால் கேப் 172.44, பி.எஸ்.இ.500-58.27 புள்ளிகளஅதிகரித்தது.

தேசிபங்குசசந்தையிலதகவல் தொழில் நுட்பம், டிப்டி பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன. மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் மிக குறைந்த அளவே அதிகரித்தன. இந்த பிரிவு பங்குகளை அதிக அளவு விற்பனை செய்ய ஆரம்பித்தல், குறியீட்டு எண்கள் சரிய வாய்ப்பு உண்டு.

மும்பை பங்குச் சந்தையில் 1,622 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 733 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 49 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

தகவல் தொழில் நுட்பம், வாகன உற்பத்தி,தொழில் நுட்பம் ஆகிய பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன. மற்ற பிரிவுகளில் உலோக உற்பத்தி, பொதுத்துறை பிரிவு தவிர மற்றவை ஆரோக்கியமானதாக இல்லை.

அமெரிக்க பங்குச் சந்தையில் திங்கட் கிழமை அதிகரித்த குறியீட்டு எண்கள் நேற்று குறைந்தன. நேற்றைய இறுதி நிலவரப்படி டோவ் ஜோன்ஸ் 16.04 புள்ளிகள் குறைந்தது. ஆனால் நாஸ்டாக் 14.30 புள்ளிகள் அதிகரித்தது. எஸ் அண்ட் பி பிரிவில் மாற்றம் இல்லை.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், குறியீட்டு எண்கள் அதிக அளவு அதிகரிக்கவில்லை. நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் எதிர்பார்த்த அளவு அதிகரித்தன. ஆனால் இன்று ஏமாற்றமே.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 2.37, ஹாங்காங்கினஹாங்செங் 156.42, சீனாவின் சாங்காய் காம்போசிட் 107.30 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. ஆனால் ஜப்பானின் நிக்கி 116.26, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 5 புள்ளிகள் குறைந்தஇருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்