மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு நாளில் மட்டும் 10 கிராமிற்கு ரூ.905 குறைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1,420 குறைந்துள்ளது.
கடந்த 18-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.290-ம், நேற்று ரூ.225-ம் குறைந்த நிலையில், இன்றும் மேலும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால், கடந்த 17-ம் தேதி ரூ.13,495 ஆக இருந்த 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,420 குறைந்து இன்று ரூ.12,075 ஆக குறைந்துள்ளது.
அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை கடந்த 18-ம் தேதி ரூ.600-ம், நேற்று ரூ.135-ம் குறைந்த நிலையில் இன்று மட்டும் ஒரே நாளில் ரூ.2,025 சரிந்துள்ளது. இதன்மூலம் மூன்று நாட்களில் ரூ.2,760 குறைந்துள்ளது. கடந்த 17-ம் தேதி ரூ.25,650 ஆக இருந்த வெள்ளியின் விலை இன்றைய சந்தை இறுதி நிலவரப்படி, ரூ.22,890 ஆக உள்ளது. மும்பை தங்கம், வெள்ளி சந்தை முடிவில் இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,135 (நேற்று ரூ.13,035) 22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,075 (12,980) பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.22,890 (24,915)