சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!

புதன், 19 மார்ச் 2008 (13:24 IST)
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகளின் எதிரொலியாக தொடர்ந்து குறைந்துவந்த இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.

மும்பை பங்கு சந்தைக் குறியீடு இன்றைய காலை வர்த்தகத்தில் 500 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 15,000 புள்ளிகளைத் தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 532 புள்ளிகள் உயர்ந்து 15,366 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 4,686 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

நிக்கி, ஹாங்செங் உள்ளிட்ட ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் எதிரொலியே இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்