மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், ஏற்ற இறக்கத்துடன் இறுதியில் நேற்றைய மாலை நிலவரத்தை விட அதிகரித்தது.
ஆனால் சென்செக்ஸ் 16 ஆயிரத்திற்கும் குறைவாகவும், நிஃப்டி 5,000 க்கும் குறைவாகவே உள்ளது.
இத் போல் மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை.
இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கமாக இருந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன.
ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் நேற்று குறைந்திருந்த குறியீட்டு எண்கள் இன்று உயர்ந்தன. இதனால் இந்திய பங்குச் சந்தை பாதிக்கப்படவில்லை.
பணவீக்க விகிதம் 5.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்ற தகவல் சிறிது பங்குச் சந்தையை பாதித்தது. ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரியில் தொழில் துறை உற்பத்தி, சென்ற வருடத்தைவிட பாதி அளவு குறைந்தது என மத்திய அரசு நேற்று அறிவித்தள்ளது இதன் பாதிப்பும் இனி பங்குச் சந்தையில் இருக்கும்.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 403.17 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 15,760.52 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 122.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4745.80 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 4.32, மிட் கேப் 55.78,,பி.எஸ்.இ. 500-139.79 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 208.35,சி.என்.எக்ஸ் ஐ.டி 91.20, பாங்க் நிஃப்டி 191.35, சி.என்.எக்ஸ் 100-117.35, சி.என்.எக்ஸ் டிப்டி 109.25, சி.என்.எக்ஸ் 500-83.55, சி.என்.எக்ஸ் மிட் கேப் 78.80,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-39.75 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1214 பங்குகளின் விலை அதிகரித்தது. 1458 பங்குகளின் விலை குறைந்தது. 60 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி நிறுவனங்களின் பிரிவு குறியீட்டு எண் 3.28%, தொழில் நுட்ப பிரிவு 1.48%, பொதுத்துறை நிறுவனங்கள் 1.83%, மின் உற்பத்தி பிரிவு 2.79%, வாகன உற்பத்தி பிரிவு 0.08%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 2.37%, தகவல் தொழில்நுட்ப பிரிவு 2.86%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 3.32%, வங்கி பிரிவு 3.05%, ரியல்எஸ்டேட் 4.76% அதிகரித்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளில் 25 பங்குகளின் விலை அதிகரித்தது. 5 பங்குகளின் விலை குறைந்தது.