மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதிருந்தே சரிந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை உயரவில்லை.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 566.56 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,975.52 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 149.80 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,771.60 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 400.61, மிட் கேப் 309.79, பி.எஸ்.இ. 500-258.62 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 421.05, சி.என்.எக்ஸ் ஐ.டி. 140.70, பாங்க் நிஃப்டி 320.20, சி.என்.எக்ஸ் 100-156.80, சி.என்.எக்ஸ் டிப்டி 303.15, சி.என்.எக்ஸ் 500-143.15, சி.என்.எக்ஸ் மிட் கேப் 241.85, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-116.40 புள்ளிகள் குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 27 பங்குகளின் விலைகள் குறைந்தது.